இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

சனி, 27 மார்ச், 2010

அனைவருக்கும் வணக்கம்


பங்குசந்தை ........!!!!!??????
என்றதும் எல்லோருக்கும் ஒருவிதமான மிரட்சி அல்லது புரியாத பயம் . ஆனால் என் அனுபவத்தில் பங்குச்சந்தை மற்ற எல்லா தொழில்களை போல்  சந்தர்ப்பங்களும் ஆபத்துகளும் லாபமும் நஷ்டமும்  நிறைந்த ஒரு தொழில்தான். எப்படி உங்களுக்கு அறிமுகமில்லாத தொழிலில் காலை வைத்தால் சறுக்கி  விடுமோ   அதேதான் பங்குசந்தையிலும்.  சில  வருடங்களுக்கு முன் நான் பங்கு வர்த்தகத்தில் நுழைந்த பொழுது எனக்கிருந்த பயமும் திருவிழாவில் தொலைந்த குழந்தையை ஒத்த மன நிலையும் இன்று இல்லை. நான  இப்பொழுது சிறிதளவு சந்தை மற்றும்  பங்குகளின் போக்கை புரிந்து கொள்ளும் வகையில் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளேன். என்னுடைய  அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த வலை தளம். 

சரியான திட்டமிடலும் பொறுமையும் இருந்தால் பங்குச்சந்தை நமது  பொருளாதார   மேம்பாட்டிற்கு   ஒரு அருமையான வாய்ப்பு. வாருங்கள் வளம் பெறுங்கள்.
 

புதன், 10 பிப்ரவரி, 2010

ஸ்டாப் லாஸ் ( Stop Loss )

ஸ்டாப் லாஸ் (   Stop Loss )

ஸ்டாப் லாஸ் என்றால் நாம் வாங்கிய  பங்கின் விலை சரிந்தால் நாம் எந்த விலையில் அந்த பங்கிலிருந்து வெளியேற  வேண்டும் என்று முடிவு செய்து கொள்வது.

உதரணமாக நீங்கள் ரிலையன்ஸ் இன் பங்குகளை இன்று வாங்குகிறீர்கள். நீங்கள் வாங்கிய விலை 952 . 30   ரூபாய்கள் ஏறும் என்று நினைத்தீர்கள். ஆனால் சந்தை முடியும் போது அப்பங்கின் விலை. 915 .00 . உங்களுக்கு 37 ரூபாய்கள் நஷ்டம். ஆனால் நீங்கள் பங்கை வாங்கும்பொழுதே அதன் விலை 942 அதாவது   10   ரூபாய்கள் குறையும்  பொழுது விற்றுவிடலாம் என்று தீர்மானித்தால் அதுதான்  ஸ்டாப் லாஸ்.

அதாவது நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் அல்லது அப்பங்கின் சப்போர்ட் லெவல் ( support level ) என்ன என்பதை பொருத்து நீங்கள்  ஒரு விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.  அந்த விலைக்கும் கீழே பங்கின் விலை சென்றால் கட்டாயம் நீங்கள் லாங் டிரேடிங் முறை   என்றால் விற்றுவிட்டோ அல்லது ஸார்ட் செல்லிங்    என்றால் வாங்கியோ  அந்தப்பங்கை விட்டு வெளியேறிவிட   வேண்டும். 

முக்கியமாக ஒரு பங்கை வாங்கியவுடன் நீங்கள் ஸ்டாப் லாஸ் முடிவுசெய்து விடவேண்டும். நீங்கள் ஆன்   லைனில் டிரேடிங்   செய்கிறீர்கள் என்றால் உடனே உங்களது சாப்ட்வேரில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுவிட வேண்டும்.  ஆப் லைனில் டிரேடிங்   செய்கிறீர்கள் என்றால்  உடனே உங்கள்  ப்ரோக்கேரிடம்  ஸ்டாப் லாஸ் விலையை சொல்லி விட வேண்டும்.

அதைவிட முக்கியம் மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்றால் உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்று உறுதி  செய்து கொள்ள வேண்டும். 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஷேர் ப்ரோக்கர் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஷேர் ப்ரோக்கர்  -   கவனத்தில் கொள்ள வேண்டியவை
  •  ஒரு நல்ல ப்ரோகரை  தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
  • ப்ரோக்கர் கமிசன் நாமே கணக்கிட்டு பழகிக்கொள்வது மிக நல்லது. அப்பொழுது தான் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ( Trade )   நமக்கு  எவ்வளவு லாபம் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்
  • டிரேடிங்  அக்கௌன்ட் தினமும் மற்றும் டீமாட்  அக்கௌன்ட் வரம் ஒரு முறையும் சரி பார்க்கப்பட வேண்டும். மொபைல் போனில் டீமாட்  அக்கௌன்ட் இன்  பங்கு  பரிவர்த்தனைகள் கிடைக்குமாறு செய்து கொண்டால் மிகவும் நல்லது
  • டிரேடிங்  அக்கௌன்ட் இல் நம்முடைய முகவரி சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிடில் நமது காசோலைகள் ( cheques ) வேறு முகவரிக்கு சென்றுவிட் வாய்ப்புள்ளது. முகவரி மாற்றம் உடனடியாக ப்ரோக்கேரிடம் தெரிவித்து விட வேண்டும்.