இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

தினசரி வர்த்தகம் - Day Trading

பங்குச் சந்தையில் இரு முறைகளில் வர்த்தகம் நடைபெறுகிறது.
தினசரி வர்த்தகம் ( day trading or  intra day  )
நீண்ட கால முதலீடு  ( investment  or long term )

நாம் தினசரி வர்த்தகத்தை பற்றி சிறிது விரிவாகப் பாப்போம்.

தினசரி வர்த்தகம் ( day trading )  என்பது பங்குகளை வாங்குவதும்  விற்பதும் ஒரே  நாளுக்குள் செய்து முடிக்கப்பட வேண்டும். அன்றைய தினம் மார்க்கெட் முடியும் பொழுது உங்கள் கையில் எந்தப் பங்கும் இருக்கக்கூடாது.    மார்க்கெட் முடியும் நேரத்திற்குள் கையிலிருக்கும் பங்குகளை  விற்றுவிட வேண்டும் . ஆங்கிலத்தில் square off  செய்து விடுவது என்று சொல்வார்கள்.

தினசரி வர்த்தகத்தில் இரு வகை உண்டு
லாங் ட்ரேடிங் ( Long Trading  )
ஷார்ட் ட்ரேடிங் ( short Selling  )

லாங் ட்ரேடிங் ( Long Trading  )  என்பது பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கி பங்கின் விலை அதிகமானவுடன் விற்பது. இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள் உயர்ந்து  கொண்டிருக்கும் பொழுது செய்யலாம் அல்லது குறிப்பிட்ட பங்குகளின் விலை உயரும் என்று நாம் முடிவெடுக்கும் பொழுது செய்யலாம்.


 ஷார்ட் ட்ரேடிங் ( short Selling  )  என்பது பங்குகளை உயர்ந்த விலையில் விற்றுவிட்டு   பங்கின் விலை குறைந்தவுடன் வாங்கிவிடுவது . இவ்வகை ட்ரேடிங் பொதுவாக மார்க்கெட் புள்ளிகள் சரிந்து  கொண்டிருக்கும் பொழுதும் அல்லது குறிப்பிட்ட பங்குகளின் விலை சரியும்  என்று நாம் முடிவெடுக்கும் பொழுது செய்யலாம்.

லாங் ட்ரடிங் பண்ணும் பொழுது உங்களுக்கு நஷ்டம் ஏற்படும் வகையில் பங்குகளின் விலை இருந்தால், அதாவது நீங்கள் உயரும் என்று நினைத்து வங்கிய பங்கின் விலை குறைந்து விட்டால்  நீங்கள் அப்பங்குகளை அடுத்த நாட்களுக்கு உங்களது கணக்கில் தேவையான பணம் இருந்தால்  டெலிவரி  எடுத்துக்கொள்ளலாம்.

இப்பொழுது இது இன்வெஸ்ட்மென்ட் அல்லது நீண்ட  கால  முதலீடு ஆகிவிடும். இது இரு நாட்களில் இருந்து சில மாதங்கள் அல்லது சில வருடங்கள் வரை கூட இருக்கலாம். பங்கை எப்பொழுது விற்கலாம் என்பது பங்கின் விலை மற்றும் உங்கள் பணத்தேவை அல்லது நீங்கள் முடிவுசெய்துள்ள லாபத்தை பங்கு அடைந்து விட்டால் என பல காரணங்களை ஆராய்ந்து நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


ஆனால் டே ட்ரேடிங் இல் வாங்கிய பங்குகளை முதலீட்டுப் பங்குகளாக மாற்றாமல் இருக்கவேண்டும் என்பது ஒரு பொதுவான  விதி.

டே ட்ரேடிங்  மிகவும் அபாயமானது ( highly risky ) புதிதாக  சந்தையில் நுழைபவர்களுக்கு ஏற்றதல்ல. முதலீடு அனைத்தும் கரைந்து போக வாய்ப்புள்ளது. ஆனாலும் எங்கு அபாயம் அதிகமோ அங்குதான் லாபமும் அதிகம்.

டே ட்ரேடிங் இல் கவனிக்க வேண்டிய சில முக்கிய அம்சங்கள்.
  • மார்க்கெட்டின் போக்கை கவனித்து மார்க்கெட்டின் போக்கிலேயே ( market trend ) செயல்பட வேண்டும்.
  • வாங்கும் விலை ( entry price ) விற்கும் விலை ( exit price )  மிகவும் முக்கியம்.
  • பங்கு மிகக் குறுகிய காலமே நம் கையிலிருக்க வேண்டும்.
  • வாங்கப்போகும் பங்கை உன்னிப்பாக கவனித்து வரவேண்டும். 
  • அதிக எண்ணிக்கையில் விற்கும் ( volume ) பங்குகளே டே ட்ரேடிங் இற்கு ஏற்றது. ஏனென்றல் விற்கும்பொழுது விரைவாக விற்றுவிடும்.  
  • நாம் முடிவு செய்த விலைக்கு அருகில் பங்கின் விலை வந்தவுடன் விரவாக விற்று லாபத்தை உறுதி செய்து கொள்ளவேண்டும். மிகவும்முக்கியம் லாபத்திலிருந்து நஷ்டத்திற்கு  பங்கின் விலை  சென்று விடக் கூடாது.
  • ஒரே பங்கில் ( single trade )  அதிக லாபம் எதிர்பார்க்கக் கூடாது.
  • ஸ்டாப் லாஸ் ( stop loss ) டே ட்ரேடிங் இன் உயிர். மிக மிக மிக மிக அவசியம்.
  • ஒரே பங்கில் ( single trade )  மொத்த முதலீட்டையும் செய்ய கூடாது
  • நஷ்டம் வரும் பொழுது பதட்ட பட வேண்டியதில்லை. மார்க்கெட்டில் நிறைய அனுபவமுள்ளவரும் வாங்கும் எல்லா பங்குகளிலும் லாபம் சம்பாதிப்பதில்லை.