இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

புதன், 10 பிப்ரவரி, 2010

ஸ்டாப் லாஸ் ( Stop Loss )

ஸ்டாப் லாஸ் (   Stop Loss )

ஸ்டாப் லாஸ் என்றால் நாம் வாங்கிய  பங்கின் விலை சரிந்தால் நாம் எந்த விலையில் அந்த பங்கிலிருந்து வெளியேற  வேண்டும் என்று முடிவு செய்து கொள்வது.

உதரணமாக நீங்கள் ரிலையன்ஸ் இன் பங்குகளை இன்று வாங்குகிறீர்கள். நீங்கள் வாங்கிய விலை 952 . 30   ரூபாய்கள் ஏறும் என்று நினைத்தீர்கள். ஆனால் சந்தை முடியும் போது அப்பங்கின் விலை. 915 .00 . உங்களுக்கு 37 ரூபாய்கள் நஷ்டம். ஆனால் நீங்கள் பங்கை வாங்கும்பொழுதே அதன் விலை 942 அதாவது   10   ரூபாய்கள் குறையும்  பொழுது விற்றுவிடலாம் என்று தீர்மானித்தால் அதுதான்  ஸ்டாப் லாஸ்.

அதாவது நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் அல்லது அப்பங்கின் சப்போர்ட் லெவல் ( support level ) என்ன என்பதை பொருத்து நீங்கள்  ஒரு விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும்.  அந்த விலைக்கும் கீழே பங்கின் விலை சென்றால் கட்டாயம் நீங்கள் லாங் டிரேடிங் முறை   என்றால் விற்றுவிட்டோ அல்லது ஸார்ட் செல்லிங்    என்றால் வாங்கியோ  அந்தப்பங்கை விட்டு வெளியேறிவிட   வேண்டும். 

முக்கியமாக ஒரு பங்கை வாங்கியவுடன் நீங்கள் ஸ்டாப் லாஸ் முடிவுசெய்து விடவேண்டும். நீங்கள் ஆன்   லைனில் டிரேடிங்   செய்கிறீர்கள் என்றால் உடனே உங்களது சாப்ட்வேரில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுவிட வேண்டும்.  ஆப் லைனில் டிரேடிங்   செய்கிறீர்கள் என்றால்  உடனே உங்கள்  ப்ரோக்கேரிடம்  ஸ்டாப் லாஸ் விலையை சொல்லி விட வேண்டும்.

அதைவிட முக்கியம் மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்றால் உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்று உறுதி  செய்து கொள்ள வேண்டும். 

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

ஷேர் ப்ரோக்கர் - கவனத்தில் கொள்ள வேண்டியவை

ஷேர் ப்ரோக்கர்  -   கவனத்தில் கொள்ள வேண்டியவை
  •  ஒரு நல்ல ப்ரோகரை  தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியம்.
  • ப்ரோக்கர் கமிசன் நாமே கணக்கிட்டு பழகிக்கொள்வது மிக நல்லது. அப்பொழுது தான் ஒவ்வொரு வர்த்தகத்திலும் ( Trade )   நமக்கு  எவ்வளவு லாபம் என்று கணக்கிட்டுக் கொள்ளலாம்
  • டிரேடிங்  அக்கௌன்ட் தினமும் மற்றும் டீமாட்  அக்கௌன்ட் வரம் ஒரு முறையும் சரி பார்க்கப்பட வேண்டும். மொபைல் போனில் டீமாட்  அக்கௌன்ட் இன்  பங்கு  பரிவர்த்தனைகள் கிடைக்குமாறு செய்து கொண்டால் மிகவும் நல்லது
  • டிரேடிங்  அக்கௌன்ட் இல் நம்முடைய முகவரி சரியானதாக இருக்க வேண்டும் இல்லாவிடில் நமது காசோலைகள் ( cheques ) வேறு முகவரிக்கு சென்றுவிட் வாய்ப்புள்ளது. முகவரி மாற்றம் உடனடியாக ப்ரோக்கேரிடம் தெரிவித்து விட வேண்டும்.

டிரேடிங் அக்கௌன்ட் ( Trading Account )

டிரேடிங்  அக்கௌன்ட்  ( Trading  Account )

இது உங்களுக்கும் உங்கள்  ஷேர் ப்ரோக்கர்  ( Share Brokker ) கும் உள்ள அக்கௌன்ட்.  இந்த அக்கௌன்ட் இல்தான் உங்களுடைய முதலீடு பணமாக இருக்கும். இந்த அக்கௌண்டில் உள்ள மதிப்பிற்கேற்ப நீங்கள் பங்குகளை வர்த்தகம் பண்ணலாம்.

ஒரு உதாரணம் பார்ப்போம்  

நாம் மேலே குறிப்பிட்டபடி உங்கள் டீமாட்டில் நீங்கள் ரிலையன்ஸ்  பங்குகள் 25 , ஹீரோ ஹோண்டாவின்  பங்குகள் 50 மற்றும் மாருதியின்    பங்குகள் 60 வைத்து இருந்தீர்கள் என்றால் அதன் இன்றைய மதிப்பு

ரிலையன்ஸ் 20 பங்குகள் X Rs 950   = 19000
ஹீரோ ஹோண்டா  50  X RS 1584   = 79200
மாருதி                               60 X RS 1380   = 82200
                                                                           180400 /-
நீங்கள் பங்குகளை  வாங்கி விற்கும் பொழுதும்   அல்லது உங்கள் பங்குகளின் மதிப்பு மாறும்பொழுதும்  இந்த மதிப்பும் மாறும்.

இன்று நீங்கள் 10  ரிலையன்ஸ் பங்குகளை விற்றுவிட்டீர்கள் என்றால் என்ன மதிப்பு வரும் என  நீங்களே மதிப்பிட்டு பாருங்களேன்.


ஷேர் ப்ரோக்கர் ( Share Brokker )

ஷேர் ப்ரோக்கர்  ( Share Brokker )

யார் வேண்டுமானாலும் பங்குசந்தையில் சென்று பங்குகளை வாங்கி விற்க முடியாது. அதெற்கென பங்கு சந்தையில் பதிவு செய்துள்ள சில நிறுவனங்கள் உள்ளன. அவர்களைத்தான் நாம்  ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகள் என்போம். அவர்கள் நமக்காக சந்தையில் நாம் விரும்பும் பங்குகளை வாங்கியோ  அல்லது விற்றோ தருவார்கள். அதற்காக  நாம் அவர்களுக்கு கமிசன்  தர வேண்டியிருக்கும். இதை பொதுவாக brokkerage  என்போம். பங்கு வர்த்தகத்தில் லாபம் சம்பாதிக்க இந்த ப்ரோக்கர் கமிசனை புரிந்து கொள்வது மிக அவசியம்.

சில முன்னணி  ஷேர் ப்ரோக்கிங் கம்பெனிகள்
India  Infoline 
Sharekahan
ICICI DIRECT 
India Bulls Securities
Religare Securities

திங்கள், 8 பிப்ரவரி, 2010

டீமாட் அக்கௌன்ட் ( Deemat Account )

பங்குகளையும் பங்கு சந்தையையும் பார்த்தாகிவிட்டது. இப்பொழுது பங்குச் சந்தையில் நுழைய என்ன வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம். முதலில்....

டீமாட்  அக்கௌன்ட்  ( Deemat Account )


பணத்தை சேமிக்க ஒரு பேங்க் அக்கௌன்ட் வைத்துள்ளோமே  அதுபோல் பங்குகளை சேமிக்க டீமாட்  அக்கௌன்ட்  ( Deemat Account ).  டீமாட் என்பது deematerialised என்பதன்  சுருக்கம். நீங்கள் வாங்கும் அல்லது விற்கும் பங்குகள் எலக்ட்ரானிக் போர்மில் ( Elctronic Form ) இந்த அக்கௌன்ட் இல்தான்  கணக்கு வைத்துக்கொள்ளப்படும்.

ஒரு உதாரணத்திற்கு நீங்கள் ரிலையன்ஸ்  பங்குகள் 25 , ஹீரோ ஹோண்டாவின்  பங்குகள் 50 மற்றும் மாருதியின்    பங்குகள் 60 வைத்து இருந்தீர்கள்  என்றால் இந்த விபரம் இந்த டீமாட் அக்கௌண்டில் தான் இருக்கும். தற்பொழுது பங்குச் சந்தையில் வர்த்தகம் பண்ண இந்த அக்கௌன்ட் அவசியம் .

இந்த டீமாட் அக்கௌன்ட் ஓபன் பண்ணுவது மிகவும்  சுலபம், தேவையான டாகுமென்ட்ஸ் கொடுத்தால் உங்கள் ப்ரோக்கர் ஓபன் செய்து கொடுத்து விடுவார்.


    ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

    சென்செக்ஸ் ( Sensex ) , நிப்டி ( Nifty)

    சென்செக்ஸ் ( Sensex )

    செய்திகளில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 122 புள்ளிகள் உயர்ந்தது அல்லது 54 புள்ளிகள் சரிந்தது என்று கேள்விப்பட்டிரிப்பீர்கள்  அதுதான் சென்செக்ஸ் ( Sensex ).

    சென்செக்ஸ் பங்குச் சந்தையின் இன்றைய நிலவரத்தை குறிக்கும் ஒரு குறிட்டு எண் ஆகும். மும்பை பங்குச் சந்தையில் பட்டியல் இடப்பட்டுள்ள  குறிப்பிடத்தக்க 30 நிறுவனங்களின் அன்றைய சந்தை செயல்பாட்டை வைத்து இதை கணக்கிடுகிறார்கள.  இந்நிறுவனங்களை  12  தொழில் துறைகளில் இருந்து தேர்ந்தெடுக்கிறார்கள்.

    இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று  உயர்ந்தால் அதாவது இந்நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு விற்கப்பட்டால் சென்செக்ஸ் மதிப்பு உயரும் அல்லது இந்நிறுவனங்களின் மதிப்பு இன்று  குறைந்தால் சென்செக்ஸ் மதிப்பு குறையும்.

    இதற்கும் நாம் உழவர் சந்தையை உதரணமாக  எடுத்க்கொள்வோம். உழவர் சந்தையில் 100  கடைகள்  இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம் இன்றைய  சந்தை நிலவரத்தை அறிய  நாம் 100 கடைகளையும் விசாரிப்பது கொஞ்சம் சிரமமான  காரியம். அதற்குபதிலாக நாம் முக்கியமான  ஒரு 10  கடைகளின் இன்றைய வியாபரத்தை வைத்து சந்தையின்  வியாபாரத்தை  அறிந்து கொள்ளலாம் . இதைத்தான் சென்செக்சில் 30  நிறுவனங்களை  வைத்து கணக்கிடுகிறார்கள்.


    நிப்டி ( nifty)

    இதே போல் எண் எஸ் ஈ ( NSE )  குறியீடு எண் நிப்டி ( nifty). இது 50 நிறுவனங்களை வைத்து கணக்கிடப்படுகிறது.

    இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியது எப்படி ஒரு பங்கை நாம் வாங்கி  விற்கிறோமோ   அதேபோல்  இந்த நிப்ட்டியை நாம் வாங்கி  விற்கலாம். இதைப்பற்றி futures and option இல்   மேலும் விரிவாக பார்க்கலாம்

    ஒரு நிறுவனம் சென்செக்ஸ் அல்லது நிப்டி இல் சேர்த்துக் கொள்ளப்படுகிறது அல்லது வெளிஎற்றபடுகிறது என்பது பொதுவாக பங்குச் சந்தையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இதைக் கணக்கில் கொண்டு பங்குகளின் மதிப்பு ஏறவோ இறங்கவோ செய்யும்.

    மேலதிக விபரங்களுக்கு இங்கே க்ளிக் செய்து  படிக்கவும்

    பங்கு சந்தை

    பங்கு சந்தை எதற்காக என்று பார்போம்

    பங்குகள் ஒரு சிறிய எண்ணிக்கையிலான பங்குதாரர்களுக்குள் பரிமாறிக் கொள்ளபடுகிறது என்றால் அது மிகவும் சுலபம். ஆனால் கோடிகணக்கான பங்குகளை விற்பது வாங்குவதும் அவ்வளவு சுலபமல்ல. யாருக்கு தேவை இருக்கிறது என்பதும் யார் விற்க போகிறர்கள் என்பது தெரிந்து கொள்ள முடியாது. 

    ஆகையால் வாங்குபவரும்  விற்பவரும் ஒரு பொதுவான  இடத்தில கூடி  தங்கள் பங்குகளை பரிமாறிக் கொள்வதே பங்கு சந்தை. இது நமது உழவர் சந்தையை போல.

    நமது நாட்டின் மிக முக்கிய இரு பங்குச் சந்தைகள் பீ எஸ் ஈ ( BSE ) மற்றும் என் எஸ் ஈ ( NSE )
    இதில் பீ எஸ் ஈ ( BSE ) மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் பாம்பே ஸ்டாக் எக்ஸ்செஞ்ச. 1875 ம் ஆண்டு   துவங்கப்பட்ட ஆசியாவின் மிகப்  பழமையான நிறுவனம் ஆகும்  என் எஸ் ஈ ( NSE )  டெல்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நேஷனல் ஸ்டாக் எக்ஸ்செஞ்ச.

    பங்குகள் ( share )

    பங்குகள் ( share )


    பங்குகள் என்றால் என்ன என்று முதலில் பார்ப்போம் நீங்கள் 5 லட்சம் முதலீடு செய்து ஒரு  நிறுவனம் நடத்துகிறீர்கள். அதை விரிவு படுத்த உங்களுக்கு மேலும் 5 லட்சம்  முதலீடு தேவை படுகிறது. நீங்கள் உங்கள் நண்பரை அணுகுகிறீர்கள். அவர் என்னால் 2 லட்சம் தான் கொடுக்க  முடியும் என்கிறார். மேலும்  இரு நண்பர்களிடமிருந்து உங்களுக்கு தேவையான மீதி 3 லட்சத்தை நீங்கள் பெற்று கொள்கிறீர்கள். அனைவரையும் பங்குதாரராக சேர்த்துக் கொள்கிறீர்கள்.


    இப்பொழுது உங்கள் நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகள் கீழ்க்கண்ட வகையில் பிரிந்து  இருக்கும்


    நீங்கள்    -   முதலீடு    - 5 லட்சம்        பங்கு    50%


    நண்பர் 1   -   முதலீடு    - 2 லட்சம்        பங்கு    20%


     நண்பர் 2   -   முதலீடு    - 2 லட்சம்        பங்கு    20%


    நண்பர் 3   -   முதலீடு    - 1 லட்சம்        பங்கு    10%


    உங்கள் நிறுவனத்தின் பங்குதாரர்களின் எண்ணிக்கை 4 . வருட இறுதியில் நீங்கள் உங்கள் நிறுவனம் ஈட்டும் லாபத்தை உங்கள் முதலீட்டுக்கேற்ற விகிதத்தில் பிரித்து கொள்கிறீர்கள் .
    இவ்வகையில் ஒரு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தில் முதலீடு செய்யும் நபருக்கு தன் நிறுவனத்தின் உரிமையை கொடுப்பது பங்கு ஆகும்.
    ஆரம்பத்தில் பங்குகளை பேப்பர் வடிவத்தில் பரிமாறிக் கொள்ளும்  பழக்கம் இருந்தது. நாளடைவில் அதில் இருந்த நிர்வாக சிக்கல்கள் மற்றும் கணணி துறையின் அசுர வளர்ச்சி இவை இரண்டும் சேர்ந்து பங்குகள் பரிமாறிக்கொள்ளும் வழக்கத்தில் ஒரு பெரிய மறுதலை ஏற்படுத்தியது.

    தற்பொழுது நிறுவனத்தின் பங்குகள் கணணி மூலமே இணையத்தில் பரிமாறிக்கொள்ள படுகிறது. உங்களிடமுள்ள பங்குகள் உங்களுடைய டீமாட் அக்கௌண்டில்  ( deemat account ) இருப்பு வைத்து கொள்ளப்படும். அது என்ன டீமாட் அக்கௌன்ட் அது வரும் பதிவுகளில் பார்போம்