இங்கே படித்து விட்டு தொடரவும்lsls Calls Calls Calls Calls Calls Calls Calls (Read DISCLAIMER before proceed )

Investment

பங்கு சந்தையில் இரு வகைகளில்  வர்த்தகம் நடைபெறுகிறது  என்று நாம் முன்பே பார்த்தோம்.  
இன்று நீண்ட கால  முதலீடு ( Investment ) பற்றி சிறிது  விரிவாகப் பார்ப்போம். பங்கு  சந்தையில் பெரும் லாபம் ஈட்டியவர்கள் எல்லாம் ( warren Buffet )   தங்கள் பணத்தை பங்கு சந்தையில்  நீண்ட கால முதலீடு செய்தேஅதைச்  சாதித்திருக்கிறார்கள்.     


நன்கு நாட்கள் முதல் இரண்டு வாரம், ஒரு மாதம் , சில மாதங்கள் மற்றும் சில வருடங்கள் என இந்த முதலீடை நீங்கள் பல காரணங்களுக்காக நீட்டிக்கொண்டே போகலாம். ஏனென்றல் சில வருடங்களுக்கு முன்  sail  எனப்படும் நமது இந்திய இரும்பு நிறுவனத்தின் பங்குகள் ரூ 35.00 க்கு விற்பனை ஆகிக்  கொண்டிருந்தது .இன்று அதன் மதிப்பு ரூ 270.00 இது மேலும்  அதிகரிக்க கூடும். அந்த விலையில்  நீங்கள்  ஒரு  1000 பங்குகள் வாங்கியிருந்தால் இன்று அதன் மதிப்பு உங்களுக்கே தெரியும்.  அதே போல் மார்ச் 2009 ல் ரூ   22.00 அக இருந்த whirlpool நிறுவனத்தின் பங்குகள் இன்று ரூ  132.50 .

இந்த உதாரணங்களைப்  பார்த்தவுடன் ஆஹா பங்குச் சந்தையில்  நமக்கு வங்கியை விட அதிக லாபம் கிடைக்கும் போலிருக்கிறதே என்று நாம் மூட்டை முடிச்சுடன் கிளம்பி விடக்கூடாது . சில பங்குகள் நமது முதலீட்டை இரு மடங்கு மும்மடங்கு ஆக்கும் ஆனால் சில பங்குகள் நமது முதலீட்டையும் கரைத்துவிட்டு சந்தையை விட்டே  ஓடி விடக் கூடிய  அபாயமிருக்கிறது. இல்லாவிட்டால் பங்குகளில் முதலீடு செய்த அனைவருமே இன்று கோடிஸ்வரர்களாக வலம்  வந்திருப்பார்களே.    சில நேரங்களில் நாம் முதலீடு செய்யும் பங்குகள் லாபம் கொடுக்கலாம் ஆனால் பங்கு  சந்தையில் தொடர்ந்து  லாபம் ஈட்ட நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும். 
  •  முதலில் நாம் தினசரி வர்த்தகம் பண்ணப்போகிறோமா அல்லது முதலீடு பண்ணப்போகிறோமா என்று தெளிவாக முடிவு செய்வது அவசியம். 
  •  நாம் முதலீடு செய்ய முடிவு செய்திருக்கும் தொகையில் பாதியை மட்டுமே முதலில் முதலீடு செய்ய வேண்டும். ஏனென்றால்  சந்தை எப்பொழுதுமே ஏறுமுகத்திலேயே  இருக்காது. அவ்வப்போது இறங்கி  தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ளும்.  இதை கரெக்சன் ( Correction ) என்பார்கள்.   நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால்  நாம் மறுபடியும் சிறிது பங்குகளை வாங்கவேண்டும். இதை  சந்தையின் வார்த்தைகளில் ஆவெரேஜ்  (  price average   ) செய்வது என்பார்கள். என்ன மயக்கம் வருகிறதா நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால் மறுபடியும் வாங்குவதா ? என்ன சொல்கிறீர்கள் என்கிறீர்களா. ஆமாம் கட்டாயம் வாங்கவேண்டும் ஏனென்றல் நாம் வாங்கப்போகும் பங்கை நாம்தான் ஆராய்ந்து முடிவு செய்துவிட்டோமோ.    அது என்ன ஆராய்ச்சி  என்று பிறகு பார்ப்போம். 
  •  நமது முதலீடு அனைத்தையும் ஒரே பங்கில்  முதலீடு செய்யாமல் பல பங்குகளில் சிறு முதலீடுகளாக வைத்திருப்பது நல்லது. அதற்காக 50 நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தல் நம்மால் அனைத்தையும் கவனிக்க முடியாது.
  • நமது முதலீடு அனைத்தையும் ஒரே துறையில் முதலீடு செய்யாமல் வேறு வேறு துறைகளில் முதலீடு செய்ய வேண்டும். இதை portfolio diversification என்பார்கள். 
  • ஒரு துறையை எடுத்துக்கொண்டால் அந்தத் துறையில் வளர்ந்துவரும்  நிறுவனங்களை உன்னிப்பாக கவனித்து  முதலீடு செய்தால் நமது முதலீடும் வேகமாக   வளரும்  
  • நாம் முதலீடு செய்ய நினைக்கும் பங்கின் விலை இப்பொழுது நாம் வாங்கும் விலையில் இல்லை என்றாலும் நாம் தொடர்ந்து அப்பங்கினை கவனித்து  வந்தால் சந்தையில் கரெக்சன் ஏற்ப்படும் பொழுது அதில் முதலீடு செய்யமுடியும்.