ஸ்டாப் லாஸ் ( Stop Loss )
ஸ்டாப் லாஸ் என்றால் நாம் வாங்கிய பங்கின் விலை சரிந்தால் நாம் எந்த விலையில் அந்த பங்கிலிருந்து வெளியேற வேண்டும் என்று முடிவு செய்து கொள்வது.
அதாவது நம்மால் எவ்வளவு நஷ்டம் தாங்க முடியும் அல்லது அப்பங்கின் சப்போர்ட் லெவல் ( support level ) என்ன என்பதை பொருத்து நீங்கள் ஒரு விலையை முடிவு செய்து கொள்ள வேண்டும். அந்த விலைக்கும் கீழே பங்கின் விலை சென்றால் கட்டாயம் நீங்கள் லாங் டிரேடிங் முறை என்றால் விற்றுவிட்டோ அல்லது ஸார்ட் செல்லிங் என்றால் வாங்கியோ அந்தப்பங்கை விட்டு வெளியேறிவிட வேண்டும்.
முக்கியமாக ஒரு பங்கை வாங்கியவுடன் நீங்கள் ஸ்டாப் லாஸ் முடிவுசெய்து விடவேண்டும். நீங்கள் ஆன் லைனில் டிரேடிங் செய்கிறீர்கள் என்றால் உடனே உங்களது சாப்ட்வேரில் ஸ்டாப் லாஸ் ஆர்டர் போட்டுவிட வேண்டும். ஆப் லைனில் டிரேடிங் செய்கிறீர்கள் என்றால் உடனே உங்கள் ப்ரோக்கேரிடம் ஸ்டாப் லாஸ் விலையை சொல்லி விட வேண்டும்.
அதைவிட முக்கியம் மார்க்கெட் சரிந்து கொண்டிருக்கிறது அல்லது பங்கின் விலை சரிந்து கொண்டிருக்கிறது என்றால் உடனடியாக உங்களது ஸ்டாப் லாஸ் விலையில் உங்கள் பங்கு விற்றுவிட்டதா என்று உறுதி செய்து கொள்ள வேண்டும்.